×

போலீஸ் என கூறி சென்னை பாஜ பிரமுகர் துப்பாக்கி முனையில் கடத்தல்: மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை மஞ்சினி நகரை சேர்ந்தவர் கோபி (எ) டெல்லி கோபி (43). சென்னையில் வசித்து வரும் இவர், மத்திய சென்னை மாவட்ட பாஜ முன்னாள் தலைவராக இருந்துள்ளார். இவரும், மனைவி மலர்வேணியும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோபியின் மகன், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த மாணவியை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து, இருவரையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், விவகாரத்து வழக்கிற்காக கடந்த 13ம் தேதி புதுச்சேரிக்கு கோபி சென்றுவிட்டு, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை பஸ் ஸ்டாப் அருகே பஸ்சுக்கு காத்திருந்தார்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல், தங்களை வடபழனி போலீசார் என கூறி அவரை காரில் ஏற்றி கடத்தியுள்ளது. சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே அவரை தாக்கி, மகன், மருமகள் எங்கே என கேட்டுள்ளது. முட்டுக்காடு பகுதியில் கார் சென்றபோது மற்றொரு காரில் வந்தவர் துப்பாக்கி முனையில் கோபியை மிரட்டியுள்ளார். கோபி சத்தம் போட்டதால் கானத்தூர் பஸ் நிறுத்தத்தில் அவரை கும்பல் இறக்கிவிட்டு சென்றுள்ளது. இது குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து அவர் ஐஜி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தார்.

அதில், மனைவி மலர்வேணி, மருமகளின் தந்தை வேலாயுதகுமார், நண்பர் கார்மேகம் ஆகியோர் ஏற்பாட்டில், 3 பேர் போலீஸ் எனக்கூறி தன்னை கடத்திச் சென்றதாகவும், நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, மகன், மருமகள் இருப்பிடம், செல்போன் நம்பரை கேட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து, மலர்வேணி, வேலாயுத குமார், கார்மேகம் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது துப்பாக்கி முனையில் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

The post போலீஸ் என கூறி சென்னை பாஜ பிரமுகர் துப்பாக்கி முனையில் கடத்தல்: மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai Baja Pramukar ,Puducherry ,Delhi Gobi ,Manjini Nagar ,Muthialbate ,Chennai ,Chennai Baja Mukharamar ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை